பின்னணி/ பின்பக்கம்
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு 1990ம் ஆண்டின் 20ம் இலக்க மூன்றாம் நிலை, வாழ்க்கைத்தொழிற் கல்விச் சட்டத்தின் கீழ் 1991ம் ஆண்டு தொழில்நுட்ப, வாழ்க்கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி துறையின் அதியுயர் அமைப்பாக தாபிக்கப்பட்டது. இதன் முதன்மைச் செயற்பாடானது, நாட்டின் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழிற் கல்விக்கான கொள்கை வகுத்தல், திட்டமிடல், தர உத்தரவாதமளித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் என்பனவாகும். 1999ம் ஆண்டு 50ம் இலக்க மூன்றாம் நிலை, வாழ்க்கைத்தொழிற் கல்வி சட்டம் (திருத்தம்) பிரகாரம் இவ்வாணைக்குழு ஒர் நியதிச்சட்ட சபையாக்கப்பட்டு, தலைவர் உட்பட 17 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளதுடன், தொழில்தருநர் சங்கங்கள் மற்றும் தனியார் துறை என்பவற்றின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துகின்றது. இப்பிரதிநிதித்துவதத்தின் பலனாக, கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி என்பவற்றின் விருத்தயை முன்னோக்கிச் செல்வதற்கான தனியார் துறையினரின் பங்களிப்பு சபை கூட்டங்களில் அதிகூடியளவில் வழங்கப்படுவதுடன் அப்பங்களிப்பின் பயனால் அரசின் தொலைநோக்கொன்றான கேள்விக்குரிய பயிற்சி முறைமையை எய்துவதற்கும் உதவுகின்றது அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவுள்ள பணிப்பாளர்கள் குழுவொன்றும் மற்றும் தனிப்பட்ட, நிதி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவுள்ள செயலாளரும் ஆணைக்குழுவின் தலைவருக்கும் மற்றும் பணிப்பாளர் நாயகத்திற்கும் உதவியாகவுள்ளனர்
எங்கள் குறிக்கோள்கள்
- மூன்றாம் நிலைக்கல்வி, வாழ்க்கைத்தொழிற் கல்வி மற்றும் பயிற்சி துறையின் அபிவிருத்திக்காக திட்டங்களை வகுத்தல்
- பயிற்சி நிலையங்களை பதிவு செய்தல் மற்றும் பாடநெறிகளை நற்சான்றுப்படுத்துலினூடாக தர உத்தரவாதத்திற்கான தேசிய முறைமையை அமுல்ப்படுத்தல்
- TVET நிறுவனங்களில் நியமங்களைத் தாபித்தல் மற்றும் பராமரித்தல் என்பவற்றை உறுதிப்படுத்தல்
- தேசிய திறன் சோதனையிடல் மற்றும் சான்றிதழ் முறைமை என்பவற்றை திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் அமுல்ப்படுத்தல்
- வாழ்க்கைத்தொழில்த் தகைமைகளுக்கான தேசிய முறைமையை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல்
- TVET துறையிற்கான தொழிற் சந்தை தகவல் முறைமையை பராமரித்தல்
- அபிவிருத்தி நிகழ்ச்சிகள் முகாமைத்துவம் மற்றும் நிதி உதவியினூடாக TVET நிறுவனங்களை அபிவிருத்தி செய்தல்
- கல்வி மற்றும் பயிற்சி என்பவற்றிற்கிடையேயான குறித்த சமத்தன்மையை உயர்த்தல்
- மூன்றாம் நிலைக்கல்வி, வாழ்க்கைத்தொழிற் கல்வி மற்றும் பயிற்சியின் தேசியக் கொள்கைகளை அபிவிருத்தி, மீளாய்வு மற்றும் மீள்வகுத்தல் செய்தல்