தற்போது காணப்படுகின்ற கணக்காய்வு கட்டுப்பாட்டு முறைமையானது (கொள்கைகள, நடைமுறைகள், முறைமைகள், மற்றும் செயற்பாடுகள்) என்பன ஆணைக்குழுவின் குறிக்கோள்களை அடைவதற்கு உதவிகரமாக உள்ளதா என பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் கணக்காய்வு அறிக்கையானது கீழ் காட்டப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஒழுங்காகவும் வினைத்திறனாகவும் நடாத்துதல்
- முகாமைத்துவ கொள்கைளுடன் ஒருங்கிசைதல்
- சொத்துக்களை பாதுகாத்தல்
- ஏமாற்றுகள் மற்றும் தவறுகளை தடுத்தல் மற்றும் கண்டறிதல்
- கணக்கு பதிவேடுகளின் துல்லியம் மற்றும் முழுமைத்தன்மை
- நம்பகமான நிதி மற்றும் செயற்பாட்டு தகவல்களை உரிய நேரத்தில் தயார் செய்தல்
உள்ளக கணக்காய்வு மற்றும் விசாரணை பிரிவின் சூழலினை (ஒட்டுமொத்த செயற்பாடு, விழிப்புணர்வு, உள்ளக கட்டுப்பாட்டு முறைமை சம்பந்தமான TVEC இன் நிர்வாகத்தின் முறைமை மற்றும் செயற்பாடு) சிறந்த முறையில், பிரதானமாக பின்வரும் விடயங்களில் கட்டுப்படுத்தல்
- பதிவு செய்தல், தராதர அங்கீகாரம் அளித்தல் மற்றும் தர முகாமைத்துவ முறைமை
- தொழிற்கல்விப் பயிற்சித்திட்டத்தினை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல், மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்கும் நிறுவகங்களிற்கு நிதி உதவிகளை வழங்குதல்
- NVQ இனை நடைமுறைப்படுத்துதல், NCS மற்றும் பாடத்திட்டத்தின் அபிவிருத்தி
- NVQ கணிப்பீடுகள், சோதனைகள் மற்றும் NVQ சான்றிதழ்களை வழங்குதல்
- கைத்தொழிற்துறைசார் திறன்கள் சபை மற்றும் தொழில் வழிகாட்டி
- முகாமைத்துவ தகவல் முறைமை மற்றும் சமூக உறவு
- நிர்வாக, கணக்கியல் மற்றும் நிதியியல் செயற்பாடுகள்
- பணிப்பாளர் நாயகத்தினால் ஒப்படைக்கப்படும்; ஏனைய விசாரணைகள் மற்றும் பணிகள்
2016 கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மீளாய்வு செய்யப்பட்ட கொள்கை ஆனது மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அதன் 13 ஆம் திகதி ஜுலை மாதம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டது.