சான்றிதழ்கள் மற்றும் ஏனைய கல்விசார் உயர் பெறுபேறுகள் ஆகியன உள்ளடங்கலாக மூன்றாம் நிலைக்கல்வி விருது மற்றும் தொழிற்கல்வி விருது என்பவற்றினை விருதளிப்பதற்கான தேசிய அங்கீகரிக்கப்பட்ட முறைமையினை அபிவிருத்தி செய்தல் 1990 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி சட்ட மூலத்தின் இரண்டாவது நோக்கமாகும். அதற்கிணங்க, 2005 ஆம் ஆண்டில் தேசிய தொழிற் தகைமை (NVQ) சட்டகமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) சட்டகமானது ஏழு மட்டங்களை கொண்ட ஓர் தகைமை சட்டகமாகும். ஓர் தகைமையானது பொதுவாக தொழிலாளர் சந்தையில் ஓர் குறித்த பதவிக்கான தேவைகளிற்கு ஏற்புடைய தேர்ச்சி அலகுகளின் பொதியாகும்.
தகைமைகளிற்கு மட்டங்களை அளிப்பதற்கான நிபந்தனைகள் பின்வரும் மூன்று காரணிகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
- அ) தகைமை பெற்ற ஒருவர் மேற்கொள்ளவேண்டிய செயன்முறைகளின் சிக்கல்தன்மை
- ஆ) கற்றல் தேவைகள் (அவ்வாறான செயன்முறைகளை கற்பதிலுள்ள இடர்பாடுகள்)
- இ) உரிய செயன்முறைகளை மேற்கொள்ளும் போது தொழிலினை பெற்றுக்கொண்டவரின் கடமைகள்
NVQ மட்டம் தகைமை வகை விளக்கம்
மட்டம் 1 தேசிய சான்றிதழ் அடிப்படை நுழைவுமட்ட தேர்ச்சிகளை பெற்றுக்கொள்ளலை அங்கீகரித்தல்
மட்டம் 2 தேசிய சான்றிதழ்
மட்டம் 3
மட்டம் 4 தேசிய சான்றிதழ் தேர்ச்சிகளின் அதிகரித்த
மட்டங்களை அங்கீகரித்தல். மட்டம் 4 தகைமையானது முழுமையான தேசிய கைவினைஞர்களிற்கு வழங்கப்படுகின்றது.
மட்டம் 5 தேசிய டிப்ளோமா
மட்டம் 6 உயர் தேசிய டிப்ளோமா தொழில்நுட்பவியலாளர் மட்டம்
தொடக்கம் முகாமைத்துவ மட்டம் வரையான மட்டங்களில் அதிகரிததுச்செல்லும் தேர்ச்சி மட்டங்களை அங்கீகரித்தல்
மட்டம் 7 இளநிலை பட்டம்
அல்லது அதற்கு சமனானது இம் மட்டமானது திட்டமிடல்,
மீளாய்வு மற்றும் முகாமைத்துவ மட்டங்களை உள்ளடக்குகின்றது.
தேசிய தேர்ச்சி நியமங்கள்
தேசிய தேர்ச்சி நியமங்களில், ஒருவர் குறிப்பிட்ட ஓர் கைத்தொழிற்துறையில் அல்லது ஓர் தொழிலில் தகைமை பெற்று தேசிய தொழிற்தேர்ச்சி தகைமைகளை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான தேர்ச்சிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில், உண்மையான வேலைத்தள வெளியீடுகள் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளன. தேசிய தேர்ச்சி நியமங்கள் கைத்தொழிற் துறைசார் நிபுணர்கள்/ கைத்தொழிற் துறை திறன்கள் சபைகள் (ISSCs) மற்றும் ஏனைய பிரதான பங்காளிகள் ஆகியோரின் ஆலோசனையுடன் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. தேசிய தேர்ச்சி நியமங்களில் கற்றல் செயன்முறையினை விடுத்து வேலைத்தளத்தில் தொழிலாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விடயங்களையே கருத்திற்கொள்ளப்படுகின்றன. இதில் ஓர் வேலைத்தளத்தில் தேர்ச்சி மிக்க தொழிலாளர் ஒருவர், தொழிலில் ஈடுபடும்போது பயன்படுத்தப்படும் தேர்ச்சிகள், அறிவு மற்றும் அணுகுமுறை என்பன பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி அடிப்படையிலான (CBT) பயிற்சி பாடத்திட்டங்கள்
தேர்ச்சி அடிப்படையிலான (CBT) பயிற்சி பாடத்திட்டங்கள் தேசிய தேர்ச்சி நியமங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. சான்றிதழ் மட்டங்களிற்கான (Nஏஞ 1 தொடக்கம் 4) பாடத்திட்டங்களை அபிவிருத்தி செய்யும்போது தேர்ச்சி நியமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி அலகுகள் பயிலுநர் பயிற்சியின் போது மேற்கொள்ள வேண்டிய ‘செயல்கள்’ (tasks) ஆக மாற்றம் பெறுகின்றன. டிப்ளோமா மட்டங்களிற்கான (NVQ 5 மற்றும் 6) பாடத்திட்டங்களை அபிவிருத்தி செய்யும்போது அலகுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி அலகுகள் CBT பாடத்திட்டங்களில் ‘கற்றல் விளைவுகள்’ (learning outcomes) ஆக மாற்றம் பெறுகின்றன.
NVQ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்
NVQ சான்றிதழ்களை இரண்டு வழிமுறைகளில் பெற்றுக்கொள்ளலாம்
- TVET இனால் தராதர அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பாடநெறியினை கற்பதன் மூலம்
மாணவர்கள் TVEC இனால் தராதர அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள தேர்ச்சி அடிப்படையிலான பயிற்சி (CBT) பாடநெறி ஒன்றினை கற்பதன் மூலம் NVQ சான்றிதழினை பெற்றுக்கொள்ளலாம்.
- முன்னைய கற்றல் அனுபவங்களை அங்கீகரிப்பதன் (RPL) ஊடாக
தேர்வுநாடியானவர் தேசிய தேர்ச்சி நியமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளிற்கு ஏற்றவாறு தனது தேர்ச்சிகள் தொடர்பான போதிய ஆதாரங்களுடன் தனது இயலுமையினை உறுதிசெய்யும் சந்தர்ப்பத்தில் அவர் முன்னைய கற்றல் அனுபவங்களை அங்கீகரித்தல் (RPL) முறைமை ஊடாக NVQ சான்றிதழினை பெற்றுக்கொள்ள உரித்துடையவராவர். RPL கணிப்பீடு தொடர்பான விண்ணப்பங்களை தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை (NAITA) அல்லது தொழிற்பயிற்சி அதிகாரசபையிடம் (VTA) கையளித்தல் வேண்டும்.