‘இலங்கையிலுள்ள தேர்ச்சி அடிப்படையிலான பயிற்சி’ (2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது) மற்றும் ‘இலங்கையிலுள்ள தேசிய தொழிற் தகைமைகளுக்கான நடவடிக்கை கையேடு’ (2005 இல் வெளியிடப்பட்டு 2009 ஆம் ஆண்டிலும் பின்னர் 2016 ஆம் ஆண்டிலும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது) மற்றும் 2016 ஆம் ஆண்டில் ‘TVEC இனால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய தேர்ச்சி அடிப்படையிலான கணிப்பீடுகளை நிர்வகிப்பதற்கான நிறுவக கட்டமைப்பினை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின், ஓர் ஒழுங்கமைக்கும் அமைப்பான TVEC இனால் NVQ கணிப்பீடு தொடர்பான நிறுவக ஒழுங்கமைப்பினை வலுப்படுத்தல்’ தொடர்பான அறிக்கை ஆகியவற்றுக்கு இணங்க NVQ கணிப்பீட்டினை நடாத்துவதற்கான ஒட்டுமொத்த பொறுப்பினை கொண்டுள்ளது. ஆகவே, TVEC ஆனது கணிப்பீட்டினை மேற்கொள்வதற்காக தர நிர்ணயம் மற்றும் கணிப்பீட்டு ஒழுங்கமைப்பு (Q & A) என்ற புதிய பிரிவினை ஆரம்பித்துள்ளது. கணிப்பீடு தொர்பான தரத்தினை பேணுதல் இப்பிரிவின் பிரதான நோக்கமாகும். அத்துடன் இப்பிரிவின் பிரதான செயற்பாடுகள் பின்வருமாறு:
- கணிப்பீட்டு ஆவணங்களிற்கு அங்கீகாரம் அளித்தல்
- NVQ 1 – 4 மற்றும் NVQ 5 மற்றும் 6 கணிப்பீட்டாளர் பயிற்சியின் பொருட்டு தேர்வுநாடிகளை தெரிவுசெய்தல்
- பூகோள அமைவிடங்களிற்கு ஏற்றவாறு தொழில் மற்றும் தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் கணிப்பீட்டாளர் தரவுத்தளம்/ பதிவேட்டினை (NVQ 1-4 மற்றும் NVQ 5 மற்றும் 6) பேணுதல்
- தராதர அங்கீகாரம் அளிக்கப்பட்ட பாடநெறிகள் தொடர்பாக மாணவர் கணிப்பீட்டினை ஒருங்கிணைத்தல்
- NVQ மட்டங்கள் 1-4, 5 மற்றும் 6 தேர்ச்சி அடிப்படையிலான கணிப்பீடுகளிற்கு கணிப்பீட்டாளர்களை நியமித்தல்
- NVQ மட்டங்கள் 5 மற்றும் 6 தேர்ச்சி அடிப்படையிலான இறுதி கணிப்பீடுகளை ஒருங்கிணைத்தல்
- பின்னூட்டல்களின் ஊடாக கணிப்பீட்டாளர்களிற்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் UNIVOTEC இற்கு உதவுதல்
- கணக்காய்வு மற்றும் சீர்ப்படுத்தல் செயலமர்வு என்பவற்றின் ஊடாக இறுதி தேர்ச்சி கணிப்பீடுகளின் சீர்தன்மையினை உறுதிசெய்தல்
- கணிப்பீடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டோரால் முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள், முறைப்பாடுகள், குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்
- கணிப்பீட்டு முடிவுகளை தெரியப்படுத்தும் மென்பொருளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல்
- உள்நாட்டிலுள்ள அல்லது வெளிநாட்டிலுள்ள தொழில்வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவகங்களினால் கோரப்படும் சந்தர்ப்பங்களில் NVQ சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்தல்
- காலத்திற்கு காலம் கணிப்பீட்டு முறையினை மீளாய்வு மற்றும் மாற்றங்களை செய்தல்